திருப்பரங்குன்றம் மலை விழாவில் சர்ச்சை: கதம்ப சாதம் சமைக்க அனுமதி மறுப்பு – பொதுமக்கள் வாக்குவாதம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
09 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 09 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருப்பரங்குன்றம் மலை விழாவில் சர்ச்சை: கதம்ப சாதம் சமைக்க அனுமதி மறுப்பு – பொதுமக்கள் வாக்குவாதம்

திருப்பரங்குன்றம் மலை விழாவில் சர்ச்சை: கதம்ப சாதம் சமைக்க அனுமதி மறுப்பு – பொதுமக்கள் வாக்குவாதம்

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற உள்ள வேல் எடுக்கும் விழாவையொட்டி, மலைமேல் கதம்ப சாதம் தயாரித்து பக்தர்களுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உணவு சமைக்க தொல்லியல் துறை அனுமதி அளிக்காததாகக் கூறப்படும் நிலையில், கோவில் நுழைவுவாயில் முன்பு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருப்பரங்குன்றத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், புரட்டாசி மாத விழாவின் ஒரு பகுதியாக மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் ஆண்டுதோறும் வேல் எடுக்கும் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாவின்போது மலைப்பகுதியில் பாரம்பரியமாக கதம்ப சாதம் சமைத்து பக்தர்களுக்கு வழங்கும் நடைமுறை நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், நடப்பாண்டு விழாவிற்காகவும் மலைமேல் உணவு தயாரிக்க அனுமதி கோரப்பட்டது. இந்நிலையில், மலைப்பகுதியில் சமையல் செய்வதற்கு தொல்லியல் துறை அனுமதி மறுத்ததாகவும், இதுதொடர்பாக ஏழு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால், வழக்கமாக நடைபெறும் கதம்ப சாதம் தயாரித்து பக்தர்களுக்கு வழங்கும் நிகழ்வில் இடையூறு ஏற்பட்டுள்ளது. சமையலுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவில் வாசல் முன்பு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான நிலை உருவானது. இதற்கிடையில், மலைமேல் உணவு சமைக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் எத்தகைய முடிவை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.