திருப்பத்தூர்: கல் குவாரியில் இருந்து பெண் சடலம் மீட்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
17 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 17 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருப்பத்தூர்: கல் குவாரியில் இருந்து பெண் சடலம் மீட்பு

திருப்பத்தூர்: கல் குவாரியில் இருந்து பெண் சடலம் மீட்பு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள பயன்பாட்டில் இல்லாத கல் குவாரியில் இருந்து 52 வயதுடைய பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடி பாரத் நகர் பகுதியில் நீண்ட காலமாக செயல்படாமல் இருக்கும் பாழடைந்த கல் குவாரி உள்ளது. இன்று காலை அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள், குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் ஒரு சடலம் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் சடலத்தை வெளியே கொண்டு வந்தனர். விசாரணையில், பெண்ணின் உடலில் பல்வேறு இடங்களில் கடுமையான காயங்கள் இருந்தது தெரியவந்தது.மேலும்,உடலைஅடையாளம்காணமுடியாதவகையில்சடலத்துடன்கல்கட்டிகுவாரிக்குள்வீசியிருக்கலாம்என்றசந்தேகமும்எழுந்துள்ளது.முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், உயிரிழந்தவர் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த சசிகலா (52) என்பது உறுதி செய்யப்பட்டது. அவரைக் கொலை செய்தவர்கள் வேறு இடத்தில் இந்தச் சம்பவத்தை அரங்கேற்றிவிட்டு, பின்னர் சடலத்தை மறைப்பதற்காக வாணியம்பாடி குவாரியில் கொண்டு வந்து வீசியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.முன்விரோதம் காரணமா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் வாணியம்பாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.