திருப்பத்தூரில் இரவு நேரத்தில் போலீசார் தீவிர ரோந்து: சட்டம்-ஒழுங்கை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

27 Jul 2026 www.thinathulir.com

திருப்பத்தூரில் இரவு நேரத்தில் போலீசார் தீவிர ரோந்து: சட்டம்-ஒழுங்கை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை

திருப்பத்தூரில் இரவு நேரத்தில் போலீசார் தீவிர ரோந்து: சட்டம்-ஒழுங்கை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை

திருப்பத்தூர் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்ஷய் அனில் வாகரே தலைமையில் காவல்துறையினர் சிறப்பு இரவு ரோந்து மற்றும் அணிவகுப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம், தண்டபாணி கோவில் தெரு உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் திரளும் பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டனர். அதேபோல், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகனங்களையும் சோதனை செய்தனர்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினருடன் திடீரென இரவு நேர ரோந்து பணியில் ஈடுபட்டது, சட்டம்-ஒழுங்கை பேணும் முயற்சியாக பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.