திருப்பதி கோவிலில் பக்தர்கள் அலைமோதல்: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

16 Jul 2026 www.thinathulir.com

திருப்பதி கோவிலில் பக்தர்கள் அலைமோதல்: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி கோவிலில் பக்தர்கள் அலைமோதல்: 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 82,255 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.3.76 கோடி என பதிவாகியுள்ளது. மேலும் 32,683 பேர் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.அதேபோல், 4.43 லட்சம் லட்டுகள விற்பனையாகியுள்ளன. 2.64 லட்சம் பக்தர்கள் அன்னபிரசாதம் பெற்றுள்ளனர். மருத்துவ சேவைகளை 3,496 பேர் பயன்படுத்தியதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால், சிலாதோரணம் வரை வெளிப்புற வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்.எஸ்.டி. டோக்கன் இல்லாத சர்வதரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.