தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. சிறந்த நடனத் திறமையால் ரசிகர்களைக் கவர்ந்துள்ள இவர், மருத்துவப் பட்டமும் பெற்றவர். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பராசக்தி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஸ்ரீலீலா, தனுஷின் 'ஓம்', ரஜினிகாந்தின் 'தர்மன்', அஜித்தின் 'டேர் டெவில்' உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், இந்தியில் கார்த்திக் ஆர்யன் ஜோடியாக அனுராக் பாசு இயக்கும் திரைப்படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில், நடிகைகள் ஸ்ரீலீலா மற்றும் ஸ்ரீ கவுரி பிரியா ஆகியோர் இன்று (நவம்பர் 13) அதிகாலை ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலை ஏழுமலையான் கோவிலுக்குச் சென்றனர். அங்கு நடைபெற்ற சுப்ரபாத சேவையில் பங்கேற்ற இருவரும், ஏழுமலையானை வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். கோவிலுக்கு வருகை தந்த நடிகைகளை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று, சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இதையடுத்து, இருவரும் ஏழுமலையானை தரிசித்து இறையருள் பெற்றனர். நடிகைகள் கோவிலுக்கு வந்த செய்தி பரவியதும், அங்கிருந்த பக்தர்கள் அவர்களைக் காண ஆர்வம் காட்டினர். மேலும், சில பக்தர்கள் நடிகைகளுடன் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்துக்கொண்டனர். தற்போது, நடிகைகள் கோவிலுக்கு வந்தது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன.