திருத்தணி முருகன் கோவிலில் நாளை 4 மணி நேரம் நடை அடைப்பு..!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Aug 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Aug 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருத்தணி முருகன் கோவிலில் நாளை 4 மணி நேரம் நடை அடைப்பு..!

திருத்தணி முருகன் கோவிலில் நாளை 4 மணி நேரம் நடை அடைப்பு..!

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, நாளை (27-ம் தேதி) மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.திருத்தணி முருகன் கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 8.45 மணி வரை பக்தர்கள் மூலவரை தரிசித்து வருகின்றனர். இந்நிலையில், ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு நாளை மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் நடை சாத்தப்பட உள்ளது.இந்த 4 மணி நேரத்தில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற உள்ளதால், பக்தர்களுக்கான தரிசனம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.சிறப்பு பூஜைகள் முடிந்ததும் மாலை 4 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். அதன்பிறகு பக்தர்கள் வழக்கம்போல் மூலவரை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.எனவே, நாளை மதிய நேரத்தில் கோவிலுக்கு வர திட்டமிட்டுள்ள பக்தர்கள், இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு தங்களது தரிசன நேரத்தை திட்டமிடுமாறு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் க.ரமணி தெரிவித்துள்ளார்.