திருச்சூரில் பயங்கர விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

05 Sep 2026 www.thinathulir.com

திருச்சூரில் பயங்கர விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

திருச்சூரில் பயங்கர விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

கேரளாவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது கார் மோதியதில், தமிழகத்தைச் சேர்ந்த 8 கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கைப்பமங்கலம், பனம்பிக்குன்னு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அந்தப் பகுதியில் சாலையோரத்தில் சரக்கு லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு சுமார் 11.40 மணியளவில் தமிழக பதிவு எண் கொண்ட கார் ஒன்று அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்தது.எதிர்பாராதவிதமாக சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் கார் வேகமாக மோதியது.மோதியதில் கார் பலத்த சேதமடைந்து உருக்குலைந்தது. காருக்குள் இருந்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.இந்த விபத்தில் காரில் பயணித்த 8 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, உடற்கூறாய்வுக்காக திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.உயிரிழந்த அனைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்கள் திண்டுக்கல்லில் உள்ள பி.எஸ்.என்.ஏ. பொறியியல் கல்லூரியில் படித்து வந்த மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குருவாயூரில் இருந்து கொடுங்கல்லூர் நோக்கி மாணவர்கள் காரில் சென்றுகொண்டிருந்தபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்துக்கான முழுமையான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள் விஸ்வா 20 வயது – சேலம் சூர்யா 20 வயது – திண்டுக்கல் சந்தோஷ் 20 வயது – மதுரை பிரசன்னா– மதுரை யுவசஞ்சித் 20 வயது – திண்டுக்கல்