தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களைக் கைப்பற்றிய தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் தற்போது கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அதிமுகவைச் சேர்ந்த விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதனால் அந்தத் தொகுதிகள் காலியாக அறிவிக்கப்பட்டன. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது. இதற்கிடையில், விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய நான்கு தொகுதிகளுடன், முதல்-அமைச்சர் விஜய் வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஐந்து தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைத்தேர்தலை முன்னிட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகள் அமைந்துள்ள மாவட்டங்களில் முதல்-அமைச்சர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு அவர் செல்கிறார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்ட விஜய், தற்போது திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தார். அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டைக்கு பயணம் மேற்கொள்கிறார். புதுக்கோட்டையில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யும் அவர், அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். மேலும், நிறைவடைந்த திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைப்பதுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். இதன் ஒரு பகுதியாக, புதுக்கோட்டை நகரில் ரூ.23.25 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நவீன பேருந்து நிலையத்தை விஜய் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். தொடர்ந்து, ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் விழாவில் 14 ஆயிரம் பயனாளிகளுக்கு ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும், ரூ.8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தையும் திறந்து வைக்கிறார். இதனுடன், நிறைவடைந்த பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைப்பதோடு, புதிய திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு திருச்சிக்கு திரும்பும் விஜய், அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்குச் செல்ல உள்ளார். முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடக்கப் பத்தியைச் சுருக்கமாக்குங்கள்