திருக்கார்த்திகை தீபத்திருவிழா: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் ஆலோசனை கூட்டம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
19 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 19 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருக்கார்த்திகை தீபத்திருவிழா: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருக்கார்த்திகை தீபத்திருவிழா: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறவுள்ள திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் இணைந்து விழா ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். உலகப் புகழ்பெற்ற திருக்கார்த்திகை தீபத்திருவிழாவைக் காண இந்த ஆண்டு 50 முதல் 60 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, பக்தர்களின் வருகை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளப்பட்ட நேரடி ஆய்வுகளின் அடிப்படையில், விழாவிற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி பங்கேற்று, பாதுகாப்பாகத் திரும்புவதற்கான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டது. மேலும், ஒவ்வொரு துறையும் மேற்கொள்ள வேண்டிய பணிகள், அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.