தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் புகழாரம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

05 Sep 2026 www.thinathulir.com

தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் புகழாரம்

தியாகத் திருவுளம் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் - மு.க.ஸ்டாலின் புகழாரம்

கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 155-வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் அவரைப் போற்றிப் பதிவிட்டுள்ளார்.அதில், இந்திய விடுதலைக்காக கடுமையான துன்பங்களை அனுபவித்ததுடன், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகக் கப்பல் இயக்கியவர் வ.உ.சி. என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, திருக்குறளுக்கு உரை எழுதியதோடு, தொல்காப்பிய உரையைப் பதிப்பித்தார் என்றும், ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் காலகட்டத்திலேயே தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் வ.உ.சி. குரல் கொடுத்ததாகக் கூறியுள்ளார்.பன்முகத் திறமை கொண்ட வ.உ. சிதம்பரனாரின் வாழ்க்கையும், சமூகப் பணிகளும் அனைவரையும் சென்றடையும் வகையில், கடந்த 5 ஆண்டுகால திராவிட மாடல் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், அதன் மூலம் செக்கிழுத்த செம்மலின் பெருமைக்கு மேலும் சிறப்பு சேர்த்ததாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதனுடன், 1908-ம் ஆண்டு நடைபெற்ற திருநெல்வேலி எழுச்சியை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்றும் அறிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய அரசும் அந்த அறிவிப்பைத் தொடர்ந்து செயல்படுத்தி, நினைவுச் சின்னப் பணியை நிறைவேற்ற வேண்டும் என வ.உ. சிதம்பரனாரின் பிறந்தநாளில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.