திமுக எம்எல்ஏக்கள் 59 பேர் அரசு கார் வேண்டாம்: உதயநிதி அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திமுக எம்எல்ஏக்கள் 59 பேர் அரசு கார் வேண்டாம்: உதயநிதி அறிவிப்பு

திமுக எம்எல்ஏக்கள் 59 பேர் அரசு கார் வேண்டாம்: உதயநிதி அறிவிப்பு

சென்னை: அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் புதிய வாகனங்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ள நிலையில், திமுகவைச் சேர்ந்த 59 எம்எல்ஏக்கள் அரசு வழங்கும் கார்களை பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.சட்டசபையில் பேசிய உதயநிதி, எம்எல்ஏக்களுக்கு புதிய வாகனங்கள் வழங்க அரசு அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டினார். தமிழக அரசு ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதாக முதல்வர் விஜய் தொடர்ந்து கூறி வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திமுகவைச் சேர்ந்த 59 எம்எல்ஏக்களும் அரசு வழங்கும் வாகனங்களை ஏற்கப் போவதில்லை என்று அவர் கூறினார்.மேலும், அரசுக்கு தேவையற்ற செலவுகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், எம்எல்ஏக்கள் வேட்புமனுவில் தெரிவித்துள்ள பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, பொருளாதார ரீதியாக நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டும் இந்தத் திட்டத்தின் கீழ் வாகனங்கள் வழங்க வேண்டும் என அரசிடம் உதயநிதி வலியுறுத்தினார்.தொடர்ந்து பேசிய அவர், தன்னிடம் ஏற்கனவே கார் இருப்பதாகவும், கார் தேவையுள்ளவர்கள் விண்ணப்பிப்பார்கள் என்றும் தெரிவித்தார். இதேபோல், தமிழக வெற்றிக் கழகத்தில் கார் வைத்திருப்பவர்களும் அரசு கார் கேட்க மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டார்.