திமுக, அதிமுக ஆதரவு அளித்தால் மறுக்க மாட்டேன்: சீமான் பரபரப்பு பேட்டி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
30 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 30 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திமுக, அதிமுக ஆதரவு அளித்தால் மறுக்க மாட்டேன்: சீமான் பரபரப்பு பேட்டி

திமுக, அதிமுக ஆதரவு அளித்தால் மறுக்க மாட்டேன்: சீமான் பரபரப்பு பேட்டி

விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜை விழா இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி, அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், சட்டமன்றத்தில் தனது குரல் ஒலிக்க வேண்டும் என்று பலரும் விரும்புவதாகவும், அதன் காரணமாகவே தேர்தலில் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார். மேலும், தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எந்தத் தலைவரையோ, இயக்கத்தையோ சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அவர், தனக்கு ஒருமுறை சட்டமன்றத்தில் வாய்ப்பு வழங்கினால் அங்கு எவ்வாறு செயல்பட முடியும் என்பதை நிரூபிப்பதாகத் தெரிவித்தார். அம்பாசமுத்திரம் தொகுதியில் வெற்றி பெற்றால், அந்தத் தொகுதியை தமிழகத்தின் முன்னோடி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் ஆதரவு அளித்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சீமான், “பசியுடன் இருப்பவருக்கு பிரியாணி வழங்கினால் வேண்டாம் என்று மறுக்க மாட்டார். அதுபோலத்தான் இதுவும். அரசியல் விமர்சனம் என்பது வேறு; அரசியல் கொள்கை சார்ந்த நிலைப்பாடு என்பது வேறு” என்று குறிப்பிட்டார். திமுக ஆதரவு அளிக்குமா என்ற கேள்விக்கு, தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அதுகுறித்துப் பேசலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருந்தது தொடர்பாகவும் சீமானிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இடைத்தேர்தலில் ஒரு கட்சி ஆதரவு அளிப்பதை கூட்டணி அமைப்பதாகக் கருதக்கூடாது என்றார். மேலும், திமுகவும் அதிமுகவும் தன்னைப் பொதுவேட்பாளராக நிறுத்த முடிவு செய்யவில்லை என்றும், அத்தகைய தகவல்களை தவெகவினர்தான் பரப்பி வருவதாகவும் தெரிவித்தார். நாங்கள் பொதுவேட்பாளர்கள்தான் என்றும் சீமான் கூறினார்.