தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் வரும் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியபாமா மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். மேலும், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இணைந்து ஆட்சி அமைக்க முயன்றதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து அ.தி.மு.க.வில் இருந்து விலகி, த.வெ.க.வில் இணைந்தார். தற்போது அதே தாராபுரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளராக களமிறங்கியுள்ள அவருக்கு, பிரசாரம் செல்லும் பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, குண்டடம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பிரசாரம் மேற்கொண்டு வரும் சத்தியபாமா, போலீஸ் பாதுகாப்புடன் பிரசாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், குண்டடம் அருகே உள்ள பெரியகுமாரபாளையம் ஊராட்சியில் சத்தியபாமா பிரசாரம் மேற்கொள்ள சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் அவரது வாகனத்தை மறித்து எதிர்ப்பு தெரிவித்ததுடன், வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சத்தியபாமாவும், த.வெ.க. நிர்வாகிகளும் ஒலிப்பெருக்கி மூலம், த.வெ.க.வுக்கு விருப்பம் இருந்தால் வாக்களிக்குமாறும், இல்லையெனில் வாக்களிக்க வேண்டாம் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. வேட்பாளர் தரப்பில் கூறப்பட்ட இந்த கருத்து அப்பகுதி வாக்காளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து சத்தியபாமா தனது பிரசாரத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். த.வெ.க. வேட்பாளருக்கு தொடர்ந்து பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது அக்கட்சி நிர்வாகிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.