மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே. பானுமதியை ஆதரித்து, செப்டம்பர் 27, 28 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபடுவார் என அ.தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு கன்னிவாடியிலும், இரவு 7 மணிக்கு உப்புத்துறைப்பாளையத்திலும் அவர் பிரசாரம் மேற்கொள்கிறார். அக்டோபர் 2-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தளவாய்பட்டினம் நிலையம் அருகிலும், அதைத் தொடர்ந்து ரோடு ஷா நிகழ்ச்சியிலும் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். இந்த பிரசாரச் சுற்றுப்பயணத்துக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தாராபுரம் தொகுதி தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என அ.தி.மு.க. தலைமைக்கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.