தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - விருதுநகரில் அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்தார் த
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Sep 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Sep 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - விருதுநகரில் அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்தார் த

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் - விருதுநகரில் அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்தார் த

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம், விருதுநகர் மாவட்டத்திலும் தொடங்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையிலான தங்க மோதிரம் வழங்கப்படும் என த.வெ.க. தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. இந்த திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, மதுரையில் தொடங்கப்பட்ட திட்டம் பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் திட்டத்தை சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்தார். விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் பிறந்த மொத்தம் 2,676 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இதன் தொடக்கமாக 250 பயனாளிகளுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி தங்க மோதிரங்களை வழங்கினார். மேலும், இனி அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்கள் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் நேரத்திலேயே குழந்தைகளுக்கான தங்க மோதிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.