தாம்பரம்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளை? – 2 தனிப்படைகள் அமைப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தாம்பரம்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளை? – 2 தனிப்படைகள் அமைப்பு

தாம்பரம்: ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளை? – 2 தனிப்படைகள் அமைப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே புதுப்பேர் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏடிஎம்மில் எச்சரிக்கை அலாரம் ஒலிப்பதற்கான இணைப்பை முதலில் துண்டித்த கொள்ளையர்கள், பின்னர் கேஸ் கட்டர் மூலம் இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுத்துச் சென்றதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் சுமார் ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.கொள்ளை குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக நகை பறிப்பு மற்றும் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்த நிலையில், தற்போது ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.