தாமரை மலர் திருட உதவ மறுத்த பேரூராட்சி ஊழியர் கொலை: 4 பேர் கைது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
27 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 27 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தாமரை மலர் திருட உதவ மறுத்த பேரூராட்சி ஊழியர் கொலை: 4 பேர் கைது

தாமரை மலர் திருட உதவ மறுத்த பேரூராட்சி ஊழியர் கொலை: 4 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில், தாமரை மலர்களைத் திருடுவதற்கு உதவ மறுத்த பேரூராட்சி தற்காலிக மின் ஊழியர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளி சைரஸ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொட்டாரத்தை அடுத்த அச்சன்குளம் பகுதியைச் சேர்ந்த கவின் (27), அழகப்பபுரம் பேரூராட்சியில் தற்காலிக மின் ஊழியராகப் பணியாற்றி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த சைரஸ் (32), அங்குள்ள குளங்களில் சட்டவிரோதமாகத் தாமரை மலர்களை வளர்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், குளங்களில் இருந்து தாமரை மலர்களைப் பறிப்பதற்காக மின் விளக்குகளை அணைக்குமாறு சைரஸ், கவினிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு கவின் மறுப்பு தெரிவித்ததால், அவரைக் கொலை செய்ய சைரஸ் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை கவின் மீன் கடை ஒன்றின் அருகே நின்றுகொண்டிருந்தபோது, ஆயுதங்களுடன் அங்கு வந்த சைரஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் அவரைச் சூழ்ந்துகொண்டு தாக்கினர். மேலும், மறைத்து வைத்திருந்த கத்தியால் கவினைக் குத்தியதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த கவின், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, சைரஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அஞ்சுகிராமம் போலீசார், கவினின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, தலைமறைவான குற்றவாளிகளைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். தீவிர விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைக்குப் பிறகு, சைரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி முத்துக்குமார் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.