தாடி வளர்க்க ரூ.10 லட்சம் செலவிட்ட நியூயார்க் இளைஞர்; சமூக வலைதளங்களில் வைரலாகும் சம்பவம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

24 Jul 2026 www.thinathulir.com

தாடி வளர்க்க ரூ.10 லட்சம் செலவிட்ட நியூயார்க் இளைஞர்; சமூக வலைதளங்களில் வைரலாகும் சம்பவம்

தாடி வளர்க்க ரூ.10 லட்சம் செலவிட்ட நியூயார்க் இளைஞர்; சமூக வலைதளங்களில் வைரலாகும் சம்பவம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர், தாடி மாற்று அறுவை சிகிச்சைக்காக இந்திய மதிப்பில் சுமார் ரூ.10 லட்சம் செலவிட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அலுவலகத்தில் பணியாற்றி வந்த அவருக்கு இயற்கையாகவே அடர்த்தியான தாடி வளராததால், முகம் மிகவும் இளமையாகத் தோன்றியதாக கூறப்படுகிறது. இந்த தோற்றம் தனது தொழில் முன்னேற்றத்தையே பாதிப்பதாக அவர் உணர்ந்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது: “என்னுடைய இளமையான தோற்றத்தால் அலுவலகத்தில் சக ஊழியர்கள் என்னை அனுபவமற்றவராகவே கருதினர். என் கருத்துகளுக்கும் பெரிதாக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. என்னைவிட குறைந்த அனுபவம் கொண்டவர்கள், முதிர்ச்சியான தோற்றம் மற்றும் தாடி காரணமாக பதவி உயர்வுகளைப் பெற்றனர். வாடிக்கையாளர்களும் என்னை போதிய மரியாதையுடன் அணுகவில்லை” என்று தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.இந்த நிலை தனது தன்னம்பிக்கையை பாதித்ததாகக் கூறிய அவர், இறுதியில் சுமார் 10 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம்) செலவில் தாடி மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.அறுவை சிகிச்சைக்குப் பிறகு அடர்த்தியான தாடியுடன் புதிய தோற்றத்தில் காணப்படும் அவர், தற்போது அலுவலகத்தில் தனக்கான மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இழந்த தன்னம்பிக்கை மீண்டும் கிடைத்துள்ளதாகவும், இந்த சிகிச்சைக்காக செலவிட்ட ஒவ்வொரு ரூபாயும் பயனுள்ளதாக இருந்ததாகவும் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.