தவெக நிர்வாகி தற்கொலை: மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தவெக நிர்வாகி தற்கொலை: மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்

தவெக நிர்வாகி தற்கொலை: மாவட்ட செயலாளர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியல்

ராமேஸ்வரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன் (38). தமிழக வெற்றிக் கழகத்தின் வார்டு செயலாளராக இருந்து வந்த இவர், நேற்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பரந்தாமனின் உயிரிழப்பு தொடர்பாக அவரது மனைவி ஜோதி காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், தனது கணவரின் தற்கொலைக்கு தவெக மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலாதான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து, ஜெயபாலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பரந்தாமனின் மனைவி மற்றும் உறவினர்கள் ராமேஸ்வரம் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுக்கப்படும் வரை பரந்தாமனின் உடலை மருத்துவமனையில் இருந்து பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும், தங்களது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர்வோம் என கூறிய அவர்கள், ராமேஸ்வரம்-தனுஷ்கோடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் போராட்டம் நடைபெற்ற இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே, பரந்தாமனின் மனைவி அளித்த புகார் மற்றும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.