தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
04 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 04 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

தவெக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 18 முதல் 23 வரை நடைபெற்றது. அதன் பின்னர், தேதி அறிவிக்காமல் சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அது நாளை மீண்டும் கூட உள்ளது.நாளை நடைபெறவுள்ள சட்டசபை அமர்வில், 2026-27 நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தவெக அரசு தாக்கல் செய்ய உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.இந்த நிலையில், சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், நாளை தொடங்கவுள்ள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை மற்றும் சட்டசபையில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.