தவெக அரசுக்கு எதிராக 31-ம் தேதி திமுக மகளிர் அணி போராட்டம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
26 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தவெக அரசுக்கு எதிராக 31-ம் தேதி திமுக மகளிர் அணி போராட்டம்

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளைக் கண்டித்து, திமுக மகளிர் அணி சார்பில் வரும் அக்டோபர் 31-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் விற்பனை போன்ற குற்றங்கள் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்துள்ளதாகவும், இதனால் மாநிலத்தின் பாதுகாப்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச் சம்பவங்களில் ஆளும் தவெகவைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பது, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றில் அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் திமுக தலைமை விமர்சித்துள்ளது. இந்த விவகாரங்களைக் கண்டித்து, அக்டோபர் 31-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் மகளிர் அணியினரும் பொதுமக்களும் பங்கேற்க வேண்டும் என்றும் அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.