தவெக அரசின் ஆணவத்திற்கு மக்கள் முடிவுகட்டுவர்: மு.க.ஸ்டாலின்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

21 Jul 2026 www.thinathulir.com

தவெக அரசின் ஆணவத்திற்கு மக்கள் முடிவுகட்டுவர்: மு.க.ஸ்டாலின்

தவெக அரசின் ஆணவத்திற்கு மக்கள் முடிவுகட்டுவர்: மு.க.ஸ்டாலின்

முதல்-அமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறப்பட்ட வழக்கில், விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வருகிற 3-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, போலீசார் அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.தி.மு.க. எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டதற்கு கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், ஆட்சியை விமர்சிப்பவர்களை குற்றவியல் சட்டப் பிரிவுகள் மூலம் ஒடுக்க முயல்வதாக த.வெ.க. அரசை விமர்சித்த தனியார் ஆங்கில நாளிதழின் தலையங்கத்தை சுட்டிக்காட்டினார்.மேலும், “நம் முதல்-அமைச்சருக்குப் புரியும் வகையில் சொல்வதானால், நாடு முழுவதும் வெளியாகும் அந்த நாளிதழின் தலையங்கம் அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளது. கைது நடவடிக்கைகள் மூலம் ஆட்சியின் குறைகளை மறைக்கலாம் என்று அரசு நினைத்தால், அதற்கு தகுந்த பதிலை மக்கள் வழங்குவார்கள்” என்று தனது பதிவில் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.