தவெக 100 நாள் ஆட்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகள் எதுவும் இல்லை: இபிஎஸ் விமர்சனம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
17 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 17 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தவெக 100 நாள் ஆட்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகள் எதுவும் இல்லை: இபிஎஸ் விமர்சனம்

தவெக 100 நாள் ஆட்சியில் குறிப்பிடத்தக்க சாதனைகள் எதுவும் இல்லை: இபிஎஸ் விமர்சனம்

சென்னையில் சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ், தவெக அரசின் 100 நாள் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.இதுவரை ஆட்சியில் இருந்த காலத்தில் பெரிய அளவிலான புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும், மக்களுக்கு பயனளிக்கும் முக்கியமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், 2026 சட்டசபைத் தேர்தலின்போது தவெக பல்வேறு வாக்குறுதிகளை அளித்ததாகக் கூறிய அவர், அவற்றில் முக்கியமானவை எதுவும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை என்றார்.விதி எண் 110-ன் கீழ் புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.தமிழக மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்ததே இந்த அரசின் ஒரே சாதனை என்று இபிஎஸ் விமர்சித்தார்.