தலைப்பு: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசின் குழுவிடம் முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
04 Nov 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 04 Nov 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தலைப்பு: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசின் குழுவிடம் முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தல்

தலைப்பு: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மத்திய அரசின் குழுவிடம் முதல்-அமைச்சர் விஜய் வலியுறுத்தல்

தமிழகத்தில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் மத்திய அரசின் உயர்மட்டக் குழுவிடம் வலியுறுத்தியுள்ளார். தமிழக முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யை, தேர்வுச் சீர்திருத்தங்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டப் பணிக்குழுவின் தலைவர் நந்தன் நிலேகனி மற்றும் குழு உறுப்பினர்களான பேராசிரியர் வி.காமகோடி, அனிதா கர்வால், சங்கர் மருவாடா ஆகியோர் இன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். இந்த ஆலோசனையின்போது, உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு நீட் அல்லது அதுபோன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு தமிழக அரசு தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. இதற்கு மாற்றாக, மாணவர்களின் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் கடந்த 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ஆம் தேதி அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் மத்திய குழுவிடம் தமிழக அரசு எடுத்துரைத்தது. மருத்துவப் படிப்புகள் மட்டுமின்றி, இதர உயர்கல்விப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையிலும் நீட் மற்றும் அதனைப் போன்ற நுழைவுத் தேர்வுகளை முற்றிலுமாக நீக்க வேண்டும் என தமிழக அரசு தனது பரிந்துரையை முன்வைத்தது. இந்தச் சந்திப்பின்போது பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் ராஜ்மோகன், தலைமைச் செயலாளர் முனைவர் மு.சாய்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.