தாராபுரம் த.வெ.க. வேட்பாளர் காரை தாக்கியதாக அ.தி.மு.க. வேட்பாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

18 Sep 2026 www.thinathulir.com

தாராபுரம் த.வெ.க. வேட்பாளர் காரை தாக்கியதாக அ.தி.மு.க. வேட்பாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு

தாராபுரம் த.வெ.க. வேட்பாளர் காரை தாக்கியதாக அ.தி.மு.க. வேட்பாளர் உட்பட 9 பேர் மீது வழக்கு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்தொகுதிக்கு வரும் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 9-ந்தேதி முதல் தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று முன்தினத்துடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், மொத்தம் 51 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதைத்தொடர்ந்து, தாராபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. பெலிக்ஸ் ராஜா தலைமையில் நேற்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. இதில் 22 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அவற்றில் 13 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவர். மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 51 மனுக்களில் 29 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. நாளை (சனிக்கிழமை) வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளாகும். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இந்த நிலையில், தாராபுரம் தொகுதி த.வெ.க. வேட்பாளர் சத்தியபாமாவின் காரை தாக்கியதாக அ.தி.மு.க. வேட்பாளர் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சத்தியபாமா வேட்புமனு தாக்கல் செய்ய சென்றபோது, அ.தி.மு.க.வினர் அவரது காரை வழிமறித்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.தாராபுரம் (தனி) தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சத்தியபாமா. அதற்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று, திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவராக பதவி வகித்தார். சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின்னர் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உள்கட்சி பிரச்சினைகள் மற்றும் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதுடன், தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.