திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று மட்டும் 83 ஆயிரத்து 252 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். மேலும், 28 ஆயிரத்து 683 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்றைய தினம் கோவில் உண்டியலில் ரூ.4 கோடியே 56 லட்சம் காணிக்கையாக கிடைத்ததாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஒரே நாளில் 4 லட்சத்து 58 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 1 லட்சத்து 82 ஆயிரம் பக்தர்கள் அன்னப்பிரசாதம் பெற்றனர். அஸ்வினி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 68 பேர் சிகிச்சை பெற்றனர். தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்ட டைம் ஸ்லாட் டோக்கன் இல்லாமல் இலவச தரிசனத்திற்கு சென்ற பக்தர்கள், சுமார் 8 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்