திருநெல்வேலிக்கு பெருமை சேர்த்த இளம் கிரிக்கெட் வீரர் பிஜுமுகேஷனுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
01 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 01 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

திருநெல்வேலிக்கு பெருமை சேர்த்த இளம் கிரிக்கெட் வீரர் பிஜுமுகேஷனுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

திருநெல்வேலிக்கு பெருமை சேர்த்த இளம் கிரிக்கெட் வீரர்  பிஜுமுகேஷனுக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

திருநெல்வேலி முத்தமிழ் பப்ளிக் பள்ளியில் (சிபிஎஸ்இ) பயிலும் மாணவர் பிஜுமுகேஷன், 14 வயதுக்குட்பட்ட சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான நான்கு மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளார். அவரது இந்தத் தேர்வு திருநெல்வேலி மாவட்டம் மட்டுமின்றி, தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இளம் வயதிலேயே தனது கிரிக்கெட் திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்றுள்ள பிஜுமுகேஷனை பாராட்டியுள்ளார்.மேலும், பிஜுமுகேஷனை தனது திருநெல்வேலி இல்லத்திற்கு நேரில் அழைத்து, வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்ததாக நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.பிஜுமுகேஷன் தொடர்ந்து தனது விளையாட்டுத் திறனை மேம்படுத்தி, எதிர்காலத்தில் பல்வேறு உயரங்களை அடைந்து, திருநெல்வேலி, தமிழகம் மற்றும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வின்போது திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவர் முத்து பலவேசமும் உடனிருந்தார்.