தமிழ்நாட்டில் ரூ.13,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
11 Oct 2026, ஞாயிறு | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 11 Oct 2026, Sunday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழ்நாட்டில் ரூ.13,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

தமிழ்நாட்டில் ரூ.13,000 கோடி வளர்ச்சித் திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட அவர், காலை 10.58 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் விஜய் நேரில் வரவேற்றார். தொடர்ந்து அமைச்சர்கள், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் அவரை வரவேற்றனர். இதையடுத்து, சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், முதல்-அமைச்சர் விஜய்யும் பங்கேற்றனர். அப்போது, தமிழ்நாட்டில் மொத்தம் ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில், ரூ.3,700 கோடி மதிப்பிலான தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், சுமார் ரூ.750 கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர், புனரமைக்கப்பட்ட 5 ரெயில் நிலையங்களையும் திறந்து வைத்தார். இதற்கு முன்னதாக, சுமார் ரூ.4,900 கோடி செலவில் அமைக்கப்பட்ட சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், பூந்தமல்லி–வடபழனி வழித்தடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். புதிய வழித்தடத்தை பிரதமர் மோடியும் முதல்-அமைச்சர் விஜய்யும் இணைந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து இருவரும் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர்.