தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழுவில் உறுப்பினராக கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, தனது நியமனம் தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சட்ட விதிகள் ஆய்வுக்குழுவில் தனக்கு உறுப்பினர் பொறுப்பு வழங்கிய முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்க்கும், சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளார். மேலும், மக்கள் நலன் மற்றும் ஜனநாயகத்தின் மாண்பை கருத்தில் கொண்டு, சட்ட விதிகள் தொடர்பான இந்த முக்கிய பொறுப்பை அர்ப்பணிப்புடனும், பொறுப்புணர்வுடனும் மேற்கொள்வேன் என கனிமொழி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.