தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
09 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 09 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு

தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைதியை நிலைநாட்டவும், சர்வதேச சட்டங்களை வலுப்படுத்தவும் அவர் மேற்கொண்ட பணிகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக நார்வே நோபல் குழு தெரிவித்துள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான பங்களிப்பு எனப் பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விருது அறிவிப்புகள் கடந்த 5-ஆம் தேதி தொடங்கின. மருத்துவம், இயற்பியல், வேதியியல் மற்றும் இலக்கியம் ஆகிய பிரிவுகளுக்கான விருதுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வம்சாவளியில் இருந்து சர்வதேச நீதித்துறை வரை நவநீதம் பிள்ளையின் முன்னோர்கள் 1890-களில் கரும்பு வெட்டும் தொழிலாளர்களாகத் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றவர்கள். அந்தப் பின்னணியில் வந்த அவர், தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் பிறந்தார். அங்கு நிலவிய இனப் பாகுபாடு, பிரிவினை மற்றும் சமூகப் புறக்கணிப்பு போன்ற சவால்களை எதிர்கொண்டு, வழக்கறிஞராகவும் சட்டத் துறையில் முன்னோடியாகவும் உயர்ந்தார். இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராகப் போராடிய நெல்சன் மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில், அவருக்குச் சட்ட உதவியும் வழங்கினார். சர்வதேச அளவில் முக்கியப் பொறுப்புகள் நவநீதம் பிள்ளை தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றம், ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றில் நீதிபதியாகப் பணியாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராகவும் அவர் பொறுப்பு வகித்துள்ளார். மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் தொடர்பாக ஐ.நா. அமைத்த சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையத்திற்கும் சமீபகாலம் வரை அவர் தலைமை தாங்கினார். அமைதி மற்றும் சர்வதேச சட்டத்திற்கான பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல சர்வதேச நீதிமன்ற வழக்குகளில் பங்கேற்றதன் மூலம், சட்டரீதியான நடவடிக்கைகள் போர் மற்றும் வன்முறைகளைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்பதை நவநீதம் பிள்ளை எடுத்துக்காட்டியுள்ளார். மேலும், சர்வதேச சட்ட அமைப்புகளை வலுப்படுத்துவதிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளார். அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்காக அவர் மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்கு அங்கீகாரமாக இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.