தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி: அமைச்சர் ஆனந்த் தொடக்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி: அமைச்சர் ஆனந்த் தொடக்கம்

தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி: அமைச்சர் ஆனந்த் தொடக்கம்

தமிழ்நாட்டின் மாநில மரமான பனையைப் பாதுகாப்பதுடன், நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்தவும், நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் ஒரு கோடி பனை விதைகளை நடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே உள்ள தேவரியம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த் இப்பணியை இன்று தொடங்கி வைத்தார். கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, எக்ஸ்னோரா இன்டர்நேஷனல், நாட்டு நலப்பணித் திட்டம், NDSO மற்றும் அக்னி ஸ்டீல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்களும் இதில் பங்கேற்கின்றனர். இந்தத் திட்டத்தின் மூலம், * நீர்நிலைகளின் கரைகளை வலுப்படுத்துதல் * அரசு காலியிடங்களில் பனை விதைகளை நடுதல் * கடற்கரை மண் அரிப்பைக் கட்டுப்படுத்துதல் * நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல் * பனை சார்ந்த மதிப்புக்கூட்டுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரித்தல் * பனை சார்ந்த தொழில்கள் வாயிலாக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் ஆகியவை முக்கிய நோக்கங்களாகக் கொண்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் ஒரு லட்சம் என்.எஸ்.எஸ். மாணவர்கள் பங்கேற்று, மொத்தம் ஒரு கோடி பனை விதைகளை நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 100 கல்லூரிகளில் பனை விதை வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சேகரிக்கப்படும் பனை விதைகள் தேவையான பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, நீர்நிலைகளின் கரைகள் உள்ளிட்ட பொருத்தமான இடங்களில் நடவு செய்யப்பட உள்ளன.