தமிழகத்தை உலுக்கிய கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழகத்தை உலுக்கிய கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து

தமிழகத்தை உலுக்கிய கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து

நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கவின் செல்வகணேஷ் ஆணவக்கொலை வழக்கில், சுர்ஜித்தின் பெற்றோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை மதுரை ஐகோர்ட்டு கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கவின் செல்வகணேஷ் (24), மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். காதல் விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதி, காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் தரப்பில் பட்டப்பகலில் அவர் கொலை செய்யப்பட்டார். கவின் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சாதிய நோக்கில் இந்தக் கொலை நடைபெற்றதாக கூறப்பட்டது. முதலில் இந்த வழக்கை பாளையங்கோட்டை போலீசார் விசாரித்து வந்த நிலையில், பின்னர் விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கொலை தொடர்பாக காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் முதலில் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு சுர்ஜித்தின் தாயாரும், காவல் உதவி ஆய்வாளருமான கிருஷ்ணகுமாரியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், வழக்கு மதுரை ஐகோர்ட்டு கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், சுர்ஜித்தின் பெற்றோர்களான சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதன் மூலம் இருவரும் கவின் கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தங்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக்கோரி ஜெயபால் தொடர்ந்த மனுவையும் மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.