தமிழகத்தில் ரூ.500 கோடி செலவில் நீர்நிலைகள் சீரமைப்பு பணிகள் தொடக்கம்; அமைச்சர் ஆனந்த் அடிக்கல் நாட்டினார்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
17 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 17 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழகத்தில் ரூ.500 கோடி செலவில் நீர்நிலைகள் சீரமைப்பு பணிகள் தொடக்கம்; அமைச்சர் ஆனந்த் அடிக்கல் நாட்டினார்

தமிழகத்தில் ரூ.500 கோடி செலவில் நீர்நிலைகள் சீரமைப்பு பணிகள் தொடக்கம்; அமைச்சர் ஆனந்த் அடிக்கல் நாட்டினார்

தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் நோக்கில் ரூ.500 கோடி மதிப்பிலான புனரமைப்புத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.3.19 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் பணிகளை அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி, வளர்ச்சியடைந்த பாரதம்–கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதாரத் திட்டத்தின் (VB-GRAMG) கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் நிர்வாகத்தில் உள்ள 10,185 வரத்துக் கால்வாய்கள் மற்றும் 809 ஏரிகள், குளங்கள், ஊரணிகள் ஆகியவற்றை சீரமைக்கும் நடவடிக்கைகள் மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்படுகின்றன.இந்தப் பணிகள் மூலம் மழைநீரை திறம்பட சேமிப்பதுடன், நீர்நிலைகளின் நீர்தேக்கத் திறனை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கான நீர்வளத்தைப் பாதுகாக்கவும் இந்தத் திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக, செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெடுங்குன்றம் ஊராட்சியில் அமைந்துள்ள புத்தூர் கிராம ஏரியின் வரத்துக் கால்வாயை சீரமைக்கும் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் தொடங்கி வைத்தார். இந்தப் பணிகளுக்காக ரூ.3.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.ஊரகப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் மூலம் நீர்வளத்தை அதிகரித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த நிகழ்ச்சியில் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். வீரப்பன் (ஐ.ஏ.எஸ்.), செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். தியாகராஜன், திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயராஜ், ஊராட்சித் துறை ஆணையர் வி. அமுதவல்லி (ஐ.ஏ.எஸ்.) மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.