தமிழகத்தில் மின் தேவை 21 ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டியது
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழகத்தில் மின் தேவை 21 ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டியது

தமிழகத்தில் மின் தேவை 21 ஆயிரம் மெகாவாட்டைத் தாண்டியது

தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வெப்பம் காரணமாக மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் மாநிலத்தின் உச்சபட்ச மின் தேவை 21,083 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் பதிவான 18,386 மெகாவாட்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு மின் தேவை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. 'எல் நினோ' பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால் வெப்பம் நீடிப்பதே மின் தேவையின் உயர்வுக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தென் மாநிலங்களில் கடந்த செப்டம்பர் மாதம் பதிவான மின் தேவை தொடர்பான புள்ளிவிவரங்களை மத்திய மின்துறை வெளியிட்டுள்ளது. தமிழகம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகியவற்றை உள்ளடக்கிய தென் மாநிலங்களின் மொத்த உச்சபட்ச மின் தேவை, கடந்த ஆண்டு செப்டம்பரில் 62,274 மெகாவாட்டாக இருந்தது. இந்த ஆண்டு செப்டம்பரில் அது 76,747 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 23.24 சதவீத வளர்ச்சியாகும். எந்த மாநிலத்தில் மின் தேவை அதிகரித்தது? கடந்த 2025 செப்டம்பர் மற்றும் 2026 செப்டம்பர் மாதங்களில் மாநில வாரியாகப் பதிவான உச்சபட்ச மின் தேவை விவரங்கள்: - கர்நாடகம்: 14,486 மெகாவாட்டிலிருந்து 20,094 மெகாவாட்டாக உயர்வு — 38.71% - தெலுங்கானா 15,906 மெகாவாட்டிலிருந்து 19,892 மெகாவாட்டாக உயர்வு — 25% - கேரளா: 4,467 மெகாவாட்டிலிருந்து 5,440 மெகாவாட்டாக உயர்வு — 21.80% - ஆந்திரப் பிரதேசம்: 12,446 மெகாவாட்டிலிருந்து 14,639 மெகாவாட்டாக உயர்வு — 17.62% - தமிழகம்: 18,386 மெகாவாட்டிலிருந்து 21,083 மெகாவாட்டாக உயர்வு — 15% - புதுச்சேரி: 506 மெகாவாட்டிலிருந்து 546 மெகாவாட்டாக உயர்வு — 7.85%தென் மாநிலங்களிலேயே கர்நாடகத்தில் மின் தேவை அதிகபட்சமாக 38.71 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேவேளையில், தமிழகத்தில் உச்சபட்ச மின் தேவை 21,083 மெகாவாட்டை எட்டியுள்ளது. ஒட்டுமொத்தமாக, தென் மாநிலங்களில் மின் தேவையின் உயர்வு கடந்த ஆண்டைவிட குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.