தமிழகத்தில் டெங்குவால் தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழகத்தில் டெங்குவால் தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தமிழகத்தில் டெங்குவால் தினமும் 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் நாள்தோறும் 200-க்கும் அதிகமானோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் சென்னையில் 79 பேர் உட்பட மொத்தம் 228 பேருக்கு டெங்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் இந்த மாதத்தில் மட்டும் 900-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை தமிழகத்தில் 17,277 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 2,000 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் உண்ணிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெங்கு அறிகுறிகள் தென்பட்ட 200-க்கும் மேற்பட்ட மாணவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில், 20-க்கும் அதிகமானோருக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று சிகிச்சை பெற்ற பின்னர் வகுப்புகளுக்குத் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தில் நேற்று முன்தினம் 29 பேருக்கு உண்ணிக்காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.