தமிழகக் காடுகளில் 3,170 யானைகள்; பாதுகாப்பில் அரசு தீவிரம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
13 Aug 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Aug 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழகக் காடுகளில் 3,170 யானைகள்; பாதுகாப்பில் அரசு தீவிரம்

தமிழகக் காடுகளில் 3,170 யானைகள்; பாதுகாப்பில் அரசு தீவிரம்

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு, யானைகளைப் பாதுகாக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், 2025-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, தமிழக வனப் பகுதிகளில் 3,170 காட்டு யானைகள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.வி. ரஞ்சித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக யானைகள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவது, மனிதர் - யானை மோதல்களைக் குறைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், இதற்காக நவீனதொழில்நுட்பங்களும்பயன்படுத்தப்பட்டுவருவதாகவுமஅதில்தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் யானைகள் அதிகமாக வாழும் மாநிலங்களில் தமிழ்நாடும் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள யானைகளின் வாழ்விடங்கள், கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் வனப் பகுதிகளுடன் இயற்கையான தொடர்பில் இருந்து, பரந்த நிலப்பரப்பை உருவாக்கியுள்ளன.2025-ஆம் ஆண்டு நடைபெற்ற யானைகள் கணக்கெடுப்பின் அடிப்படையில், தமிழகத்தில் 3,170 காட்டு யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 9.1 லட்சம் எக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் 5 யானைகள் காப்பகங்கள் மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.மனிதர் - வனவிலங்கு மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக இந்த ஆண்டில் ரூ.20 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.யானைகளைப் பாதுகாப்பது அரசு மற்றும் வனத்துறையின் கடமை மட்டுமல்ல என்றும், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் பங்களிப்பும் அவசியம் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். யானைகளையும் காடுகளையும் பாதுகாத்து, மனிதர் - யானை நல்லிணக்கத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.