தமிழக நூலகங்களில் 30 நாட்களில் அவசரமாக வாங்கப்பட்ட புத்தகங்கள்... ரூ.190 கோடி கொள்முதலில் அதிர்ச்சி மோசடி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
14 Nov 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Nov 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழக நூலகங்களில் 30 நாட்களில் அவசரமாக வாங்கப்பட்ட புத்தகங்கள்... ரூ.190 கோடி கொள்முதலில் அதிர்ச்சி மோசடி

தமிழக நூலகங்களில் 30 நாட்களில் அவசரமாக வாங்கப்பட்ட புத்தகங்கள்... ரூ.190 கோடி கொள்முதலில் அதிர்ச்சி மோசடி

தமிழகத்தில் உள்ள பொது நூலகங்களுக்காக ரூ.190 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வெறும் 30 நாட்களுக்குள் அவசர அவசரமாக புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொள்முதலில் போலி எழுத்தாளர்கள் பெயரிலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியும் தயாரிக்கப்பட்ட புத்தகங்கள் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 70,674 சந்தேகத்திற்குரிய புத்தகங்கள் அகற்றப்பட்டுள்ள நிலையில், ஆய்வு தொடர்வதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனத் தெரிகிறது. கோவை காந்திபுரத்தில் திறக்கப்பட்ட பெரியார் அறிவுலகம் நூலகத்தில் போலியான புத்தகங்கள் வாங்கப்பட்டு, அதன் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தார். பெரியார் அறிவுலகத்துக்கான நூல்களைப் பரிந்துரைத்து, தேர்வு செய்து கொள்முதல் செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவில் அவர் உறுப்பினராக இருந்தார். அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களின் பெயர்களைப் பயன்படுத்தி போலியான நூல்கள் தயாரிக்கப்பட்டு, அவை அதிக விலைக்கு வாங்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் தவெக இடையே அரசியல் மோதல் அதிகரித்துள்ளது. அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தின. இதையடுத்து, புகாருக்கு உள்ளான பதிப்பகங்களின் புத்தகங்கள் பெரியார் அறிவுலக நூலகத்திலிருந்து அகற்றப்பட்டன. இதற்கிடையே, இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், முறைகேட்டுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களின் சுமார் ரூ.22 லட்சம் பணம் இருப்பதாகக் கூறப்படும் மூன்று வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய நிறுவனங்களின் விவரங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களுக்கு விநியோகிக்கப்பட்ட சந்தேகத்திற்குரிய புத்தகங்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை நவம்பர் 16ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.7 கோடி மதிப்பில் 70,674 சந்தேகத்திற்குரிய நூல்கள் மாநிலம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், புத்தகக் கொள்முதல் நடைமுறைகளில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது. கோவை பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட பொது நூலகங்களுக்காக முறையான வழிமுறைகளைப் பின்பற்றாமல், வெறும் 30 நாட்களுக்குள் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வில், போலி எழுத்தாளர்களின் பெயர்களிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடனும் உருவாக்கப்பட்ட சுமார் ரூ.7 கோடி மதிப்பிலான 70,674 சந்தேகத்திற்குரிய புத்தகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றை அகற்றும் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரூ.190 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னணி தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆறு மாவட்ட நூலகங்களைத் தவிர்த்து, கோவை, திருச்சி, சேலம், கடலூர், திருநெல்வேலி ஆகிய ஐந்து அறிவுலக நூலகங்களுக்குப் புத்தகங்கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதற்காக மொத்தம் ரூ.190 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த திமுக ஆட்சியின்போது, 2025 நவம்பர் 5ஆம் தேதி வெளியிடப்பட்ட அரசாணையின்படி, புத்தகக் கொள்முதல் பணிகளைக் கண்காணிக்க நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை நூல் பரிந்துரைக்குழு, நூல் தேர்வுக்குழு, நூல் கொள்முதல் பேச்சுவார்த்தைக்குழு மற்றும் உயர்நிலைக்குழு ஆகும். இந்தக் குழுக்களில் எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், மூத்த பத்திரிகையாளர்கள், நூல் விமர்சகர்கள் உள்ளிட்ட 137 பேர் நூல் பரிந்துரைக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். இந்தக் குழுவின் கூட்டம் ஜனவரி 9ஆம் தேதி நடைபெற்றது. அதில் 112 உறுப்பினர்கள் பங்கேற்றனர். வழக்கமாக நூலகங்களுக்கான புத்தகங்களை வாங்குவதற்கு பல்வேறு கட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவது வழக்கம். முதலில் நூல்களைப் பரிந்துரைக்கும் பணிக்கே மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை தேவைப்படும். அதன்பிறகு பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் தலைப்புகள் ஆய்வு செய்யப்படும். தொடர்ந்து பதிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களுடன் விலை தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு, இறுதியாக உயர்நிலைக்குழுவின் ஒப்புதல் பெறப்படும். இந்த நடைமுறைகள் அனைத்தையும் முடிப்ப