தமிழக சட்டசபையில் இன்றைய நிகழ்வுகள் தொடக்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழக சட்டசபையில் இன்றைய நிகழ்வுகள் தொடக்கம்

தமிழக சட்டசபையில் இன்றைய நிகழ்வுகள் தொடக்கம்

தமிழக சட்டசபையின் இன்றைய கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடக்கமாக, எண்ணூர்–கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்த விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார். இதற்கு பதிலளித்த சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ், எண்ணூர்–கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் உயிரிழந்ததற்கு தொழிற்சாலைக் கழிவுகள் காரணம் இல்லை என்றும், மனிதக் கழிவுகள் உள்ளிட்ட கழிவுநீர் கலந்ததன் காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.இன்றைய சட்டசபை கூட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, நீதி நிர்வாகம், எரிசக்தித் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, சட்டத்துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்த பிறகு, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் நிர்மல்குமார் மற்றும் ரமேஷ் ஆகியோர் பதிலளிக்க உள்ளனர். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட துறைகள் சார்பில் புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட உள்ளன.சிறப்பு திட்ட செயலாக்கத்துறை முதல்-அமைச்சர் விஜய்யின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, அந்தத் துறை தொடர்பான புதிய அறிவிப்புகளை அவர் நேரடியாகவோ அல்லது அவரது சார்பிலோ அமைச்சர்கள் வெளியிட உள்ளனர்.