தமிழக காவல்துறையில் 10,000 புதிய பணியிடங்கள்! 6 மாதங்களில் நிரப்ப முதல்வர் விஜய் உத்தரவு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
13 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழக காவல்துறையில் 10,000 புதிய பணியிடங்கள்! 6 மாதங்களில் நிரப்ப முதல்வர் விஜய் உத்தரவு

தமிழக காவல்துறையில் 10,000 புதிய பணியிடங்கள்! 6 மாதங்களில் நிரப்ப முதல்வர் விஜய் உத்தரவு

தமிழக காவல்துறையில் நிலவும் ஆள் பற்றாக்குறையைப் போக்கும் வகையில், அடுத்த 6 மாதங்களுக்குள் 10,000 புதிய காவலர்களை நியமிக்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து நடைபெறும் கொலைச் சம்பவங்கள், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான முறைகேடு புகார்கள், சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்லும் நிகழ்வுகள் உள்ளிட்டவை பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றன. இதையடுத்து, மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேற்று உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறையின் மூத்த அதிகாரிகள் பங்கேற்ற இந்தக் கூட்டம், நடப்பு வாரத்தில் முதலமைச்சர் நடத்திய மூன்றாவது சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டமாகும். இதில், தமிழகத்தில் பதிவான கொலை வழக்குகள், அவற்றுக்கான காரணங்கள் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விரிவாக எடுத்துரைத்தனர். இதனைத் தொடர்ந்து, காவல்துறையின் செயல்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில், அடுத்த ஆறு மாதங்களுக்குள் 10,000 காவலர்களை புதிதாக நியமிக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். கூட்டம் முடிந்ததும் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆர். நிர்மல்குமார் கூறியதாவது: முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதில் இருந்து, குற்றப் பின்னணி கொண்ட 19,000 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில், 10,000 முதல் 15,000 காவலர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முதலமைச்சரின் உத்தரவின்பேரில் தொடங்கப்பட்டுள்ளன. அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறை தொடர்பான பணிகளை முதலமைச்சர் நேரடியாகக் கண்காணித்து வருகிறார். மேலும், தமிழகத்தில் இதுவரை சுமார் 6,700 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 2,800 வழக்குகள் மே 10ஆம் தேதிக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பானவை. இந்த வழக்குகளில் அடையாளம் காணப்பட்ட 3,229 குற்றவாளிகளில், 152 பேரைத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் நடவடிக்கையாக, காவல்துறையினரின் நேரடி கள ரோந்துப் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் செயல்பாடுகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அமைச்சர் ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.