தமிழக MSME வளர்ச்சிக்கு நீண்டகால செயல் திட்டம்: தொழில்துறை ஆலோசகர் நியமிக்க டெண்டர்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
16 Jul 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 16 Jul 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தமிழக MSME வளர்ச்சிக்கு நீண்டகால செயல் திட்டம்: தொழில்துறை ஆலோசகர் நியமிக்க டெண்டர்

தமிழக MSME வளர்ச்சிக்கு நீண்டகால செயல் திட்டம்: தொழில்துறை ஆலோசகர் நியமிக்க டெண்டர்

தமிழ்நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறையின் நீண்டகால வளர்ச்சிக்கான விரிவான செயல் திட்டத்தை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக தொழில்துறை ஆலோசகரை நியமிக்கும் நோக்கில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.இந்த முயற்சியின் மூலம் உணவு பதப்படுத்துதல், மின்னணு, தோல், ஜவுளி, ஆட்டோமொபைல் மற்றும் மின்சார வாகனங்கள் உள்ளிட்ட முக்கிய தொழில் துறைகளின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகள் வழங்கப்படவுள்ளன.மேலும், உற்பத்தித் திறன் உயர்த்துதல், தொழிலாளர்களின் திறன் மேம்பாடு, புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம், ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவித்தல், டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டை விரிவுபடுத்துதல் போன்ற அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.உலகளாவிய போட்டிக்கு தமிழக MSME நிறுவனங்களை தயார்படுத்துதல், புதிய முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரித்தல் ஆகிய நோக்கங்களுடன் இந்த செயல் திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்காக தொழில்துறை ஆலோசகரை நியமிக்கும் பணிகளை தமிழக அரசு டெண்டர் மூலம் முன்னெடுத்து வருகிறது.