தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
28 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை அளிக்கப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் செல்லும் அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 9-ம் தேதியும் அரசு விடுமுறை அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வெளியூர்களில் தங்கி வேலை செய்யும் அரசு ஊழியர்கள், கல்வி பயிலும் மாணவர்கள் உள்ளிட்டோர் தீபாவளி பண்டிகையின்போது தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இதனால், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என இரண்டு நாட்கள் மட்டுமே வழக்கமான வார இறுதி விடுமுறை கிடைக்கும் சூழல் உள்ளது. மேலும், தீபாவளி நாளில் அமாவாசை வருவதால், சிலர் அன்று அசைவ உணவுகளைத் தவிர்த்து, மறுநாள் அவற்றைச் சமைத்து உண்பார்கள். இதனால், சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் பண்டிகை முடிந்த உடனேயே பணியிடங்களுக்குத் திரும்புவது சிரமமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே, குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகத் தீபாவளியைக் கொண்டாடவும், பயணச் சிரமமின்றிப் பணிக்குத் திரும்பவும் ஏதுவாக, நவம்பர் 9-ம் தேதி திங்கட்கிழமையும் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து, தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசு விடுமுறை அறிவிப்பு வெளியாகுமா எனப் பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.