தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து நேற்று ஒரேநாளில் 1.70 லட்சம் பேர் பயணம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Nov 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Nov 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து நேற்று ஒரேநாளில் 1.70 லட்சம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகை: சென்னையில் இருந்து நேற்று ஒரேநாளில் 1.70 லட்சம் பேர் பயணம்

தீபாவளி பண்டிகை வரும் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று முதல் வரும் 7-ஆம் தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் 6,573 பேருந்துகளுடன் கூடுதலாக 9,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 1,659 பேருந்துகள் தனியார் ஒப்பந்தப் பேருந்துகளாகும். மூன்று நாட்களையும் சேர்த்து மொத்தம் 15,659 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி முடிந்து மீண்டும் சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, வரும் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு நாட்களிலும் வழக்கமான 4,382 பேருந்துகளுடன் கூடுதலாக 6,815 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் 1,241 தனியார் ஒப்பந்தப் பேருந்துகளும் அடங்கும். இதன்படி மொத்தம் 11,197 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கிடையே, நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து சுமார் 1.70 லட்சம் பேர் அரசுப் பேருந்துகள் மூலம் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர். சென்னையில் இருந்து 862 சிறப்புப் பேருந்துகள் உட்பட மொத்தம் 2,207 பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன. பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் இன்றும் 3,000-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், வண்டலூர் சந்திப்பு மற்றும் ஜி.எஸ்.டி. சாலை பகுதிகளில் பாதுகாப்புப் பணிகளுக்காக 1,500 போலீசார் 24 மணி நேரமும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.