துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
30 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 30 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்

ஜப்பானின் அய்ச்சி மாகாணம் நகோயா நகரில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். அந்த வரிசையில், ‘டிராப் கலப்பு இரட்டையர்’ (Trap Mixed Team) துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் நீரு தண்டா மற்றும் கைனன் செனாய் ஜோடி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நீரு தண்டாவுக்கு இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிடைத்துள்ள 2-வது தங்கப் பதக்கம் இதுவாகும். தற்போதைய பதக்கப் பட்டியலில் இந்தியா 9 தங்கம், 21 வெள்ளி, 27 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களுடன் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.