தனுஷின் “ஓம்” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அப்டேட்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

05 Sep 2026 www.thinathulir.com

தனுஷின் “ஓம்” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அப்டேட்

தனுஷின் “ஓம்” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அப்டேட்

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தின் அடுத்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் மம்முட்டியின் பிறந்த நாளை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி அவரை மையப்படுத்திய கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், ‘அமரன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அவர் தற்போது நடித்து வருகிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம், இதுவரை ‘தனுஷ் 55’ என்ற தற்காலிக பெயரில் குறிப்பிடப்பட்டு வந்தது.ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஸ்ரீலீலா மற்றும் சாய் பல்லவி கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதுடன், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷாவும் முக்கிய வேடத்தில் இணைந்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நஸ்ருதீன் ஷா தமிழில் நடிப்பதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.சமீபத்தில் வெளியான ‘ஓம்’ படத்தின் தலைப்பு போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும், திரைப்படம் வரும் அக்டோபர் 16-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில்வெளியாகும்எனபடக்குழுஅதிகாரப்பூர்வமாகஅறிவித்துள்ளது.இப்படத்திற்கான தீம் இசையை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் சமீபத்தில் வெளியிட்டார். இந்த இசையும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அதேபோல், தனுஷின் பிறந்த நாளையொட்டி ‘அலாக்கா லோவா’ என்ற பெயரில் படத்தின் முதல் பாடலும் வெளியானது.இந்நிலையில், மம்முட்டியின் பிறந்த நாளான செப்டம்பர் 7-ஆம் தேதி ‘ஓம்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதன் மூலம் படத்தில் மம்முட்டியின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.