மயிலாடுதுறை மாவட்டம் கோமல் பாடகச்சேரி கிராமத்தில் தனியாக வசித்து வந்த மூதாட்டியின் வீட்டுக்குள் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் புகுந்து கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் ஓட்டை வழியாக உள்ளே நுழைந்த அந்த நபர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை மிரட்டியதுடன், அவரது கழுத்தை நெறித்துள்ளார். பின்னர் மூதாட்டியிடம் இருந்த 7.5 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மூதாட்டி மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைவாக கைது செய்ய மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகா பிரியா உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.