தனி விமானத்தில் கோவை வந்தடைந்தார் முதல்-அமைச்சர் விஜய்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
16 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 16 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தனி விமானத்தில் கோவை வந்தடைந்தார் முதல்-அமைச்சர் விஜய்

தனி விமானத்தில் கோவை வந்தடைந்தார் முதல்-அமைச்சர் விஜய்

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி செலவில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தைத் திறந்து வைப்பதற்காக, முதல்-அமைச்சர் விஜய் இன்று (வெள்ளிக்கிழமை) கோவை வந்தடைந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் வந்த அவருக்கு, விமான நிலையத்தில் அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர், அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 7 தளங்களில் பிரமாண்ட நூலகம்! காந்திபுரத்தில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 7 தளங்களுடன் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.300 கோடி மதிப்பிலான இந்த நூலகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. மாணவ, மாணவிகள் அறிவியல் சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் அறிவியல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. 11.4 கி.மீ. தூரம் ரோடு ஷோ விமான நிலையத்தில் இருந்து புறப்படும் முதல்-அமைச்சர் விஜய், அவினாசி சாலை வழியாக காந்திபுரத்தில் உள்ள நூலகம் வரை சுமார் 11.4 கிலோமீட்டர் தூரம் ரோடு ஷோ மேற்கொண்டு பொதுமக்களைச் சந்திக்கிறார். அவரது வருகையை எதிர்பார்த்து தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் திரண்டுள்ளனர். குறிப்பாக, காந்திபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். பெரியார் சிலை, கல்வெட்டை திறந்து வைக்கிறார் நூலகத்தைச் சென்றடைந்ததும், அதன் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை மற்றும் பெரியார் அறிவுலகம் தொடர்பான கல்வெட்டை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, அங்குள்ள வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், புத்தக வாசிப்புப் பிரிவு மற்றும் டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிடுகிறார். இதன் பின்னர், நூலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்குச் செல்லும் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் வரவேற்பு அளித்து நினைவுப் பரிசுகளை வழங்க உள்ளனர். நலத்திட்ட உதவிகள் வழங்கும் விஜய் விழாவில் கோவை மாவட்டத்தில் நிறைவடைந்த திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார். மேலும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, கோவையில் நடைபெறும் அரசு விழாவில் விஜய் முதன்முறையாகப் பங்கேற்க உள்ளதால், அவரைக் காணவும் வரவேற்கவும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு முதல்-அமைச்சரின் வருகையை முன்னிட்டு, அவினாசி சாலையின் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. விமான நிலையம் முதல் காந்திபுரம் நூலகம் வரையிலான பகுதிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசாரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும், அப்பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விழாவை முன்னிட்டு நூலக வளாகத்தில் அழகிய புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டிடம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன், சாலைகளும் சீரமைக்கப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் விஜய்யின் வருகையால் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில், அவரை வரவேற்கப் பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.