தனுஷ் பிறந்தநாள்: “தலைவர் தனுஷ்” போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய இயக்குநர்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Jul 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Jul 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தனுஷ் பிறந்தநாள்: “தலைவர் தனுஷ்” போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய இயக்குநர்

தனுஷ் பிறந்தநாள்: “தலைவர் தனுஷ்” போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய இயக்குநர்

நடிகர் தனுஷ் இன்று தனது 43-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தற்போது தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் ‘ஓம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து, ‘லப்பர் பந்து’ படத்தின் இயக்குநரின் புதிய படத்திலும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் ‘தமிழ் முருகன்’ திரைப்படத்திலும் அவர் நடிக்க உள்ளார்.பிறந்தநாளை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகிலுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் தனுஷ் ரசிகர் மன்றம் சார்பில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிலையில், ஓம் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தனுஷின் 43-வது பிறந்தநாளை முன்னிட்டு புதிய காமன் டிபி (Common DP) போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த போஸ்டரில் “தலைவர் தனுஷ்” என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, அந்த போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிர்ந்த ரசிகர்கள், தனுஷின் அரசியல் வருகை குறித்தும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.மேலும், தனது பிறந்தநாளை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை தனுஷ் நேரில் சந்தித்து, அவர்களின் வாழ்த்துகளை ஏற்றுக்கொண்டார்.அண்மையில், தனுஷ் தனது ரசிகர் மன்றத்திற்காக தனி கொடியை அறிமுகப்படுத்தியதாக கூறப்பட்ட தகவலும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. அந்தக் கொடியில் “எண்ணம் போல் வாழ்க்கை”என்ற வாசகம் இடம்பெற்றிருந்ததாகவும், இதன் காரணமாக அவருக்கு அரசியல் ஆர்வம் இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதுதொடர்பான விவாதங்களும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றன.சமீப காலமாக ரசிகர் மன்ற செயல்பாடுகளில் தனுஷ் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சுமார் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பகுதிவாரியாக ரசிகர்களை சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்து, உணவு வழங்கி உபசரித்து வருவது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தனது வாழ்த்து பதிவில், “தனுஷ் சாரின் ரசிகர்கள் உருவாக்கிய எண்ணற்ற நினைவுகளுக்கும் அன்புக்கும் வாழ்த்துகள். அவரது 43-வது பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வ காமன் டிபியை வெளியிடுவதில் மகிழ்ச்சி. பயணம் அவருடையது; கொண்டாட்டம் ரசிகர்களுடையது” என்று குறிப்பிட்டுள்ளார்.