தானம், பாகப்பிரிவினைக்கு காகிதமில்லா பத்திரப்பதிவு- நவம்பர் 2 முதல் அமல்: தமிழக அரசு அறிவிப்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
08 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 08 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

தானம், பாகப்பிரிவினைக்கு காகிதமில்லா பத்திரப்பதிவு- நவம்பர் 2 முதல் அமல்: தமிழக அரசு அறிவிப்பு

தானம், பாகப்பிரிவினைக்கு காகிதமில்லா பத்திரப்பதிவு- நவம்பர் 2 முதல் அமல்: தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் செட்டில்மென்ட், பாகப்பிரிவினை மற்றும் விடுதலை உள்ளிட்ட நான்கு வகையான பத்திரங்களை காகிதமில்லா முறையில் பதிவு செய்யும் புதிய நடைமுறை நவம்பர் 2-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு வருகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. வீடு மற்றும் மனை விற்பனை பத்திரங்களை சார்-பதிவாளர் அலுவலகத்துக்குச் செல்லாமலேயே பதிவு செய்யும் திட்டம் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக தானப்பத்திரம், பாகப்பிரிவினை, விடுதலை மற்றும் தானம் ரத்து ஆகிய பத்திரங்களுக்கான பதிவையும் ஆன்லைன் முறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் வரும் 15-ம் தேதி முதல் அமலாகும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான கணினி மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நான்கு வகை பத்திரங்களையும் காகிதமில்லா முறையில் பதிவு செய்யும் நடைமுறை நவம்பர் 2-ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை பதிவுத்துறை செயலர் குமரகுருபரன் பிறப்பித்துள்ளார். மேலும், இந்த புதிய வசதி பதிவுத்துறையின் ‘ஸ்டார் 3.0’ மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளது.