தந்தை பெரியாரின் 148வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை..!
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

13 Sep 2026 www.thinathulir.com

தந்தை பெரியாரின் 148வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை..!

தந்தை பெரியாரின் 148வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை..!

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 17.9.2026 அன்று தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருஉருவச் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது உருவப்படத்திற்கு அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். மேலும், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அதேபோல், உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய மற்றும் முன்னாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் அதிமுக தலைமைக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது.