தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

12 Sep 2026 www.thinathulir.com

தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்

தூத்துக்குடியில் விநாயகர் சிலைகள் விற்பனை மும்முரம்

விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தூத்துக்குடி மாநகரில் விநாயகர் சிலைகள் மற்றும் பூஜைப் பொருட்களின் விற்பனை களைகட்டியுள்ளது. நாடு முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவதையொட்டி, பொதுமக்கள் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்க கடை வீதிகளில் திரண்டு வருகின்றனர். தூத்துக்குடி சிவன் கோவில் அருகே உள்ள கடைகளில் பல்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர். சிறிய அளவிலான சிலைகள் முதல் பெரிய அளவிலான வண்ணச் சிலைகள் வரை பல்வேறு வகைகள் விற்பனைக்கு உள்ளன. இந்த சிலைகள் ரூ.20 முதல் ரூ.3 ஆயிரம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. பண்டிகை நெருங்கியுள்ளதால், தூத்துக்குடி மாநகரின் முக்கிய கடை வீதிகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.